சமயபுரம் கோவில் ஊழியரிடம் 400 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய சொன்னாரா உயர் அதிகாரி!
திருச்சி
சமயபுரம் கோவில் ஊழியரிடம் 400 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய சொன்னாரா உயர் அதிகாரி!
400 ரூபாய் கொடு இல்லனா போ..! – மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக சட்டப்பேரையில் இயற்றிய 110 விதியை மீறும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பணியாளர்கள் செயல்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி – வீடியோ வைரல்
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும் புகழ்பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது இங்கு தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோவிலில் அதிகபட்சம் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் விலை என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது மாதம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
இக்கோவிலில் வடக்கு வாசலில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது.
அதன்படி அவ்வழியாக முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கை குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆனால் அந்த விதியை மீறும் வகையில் பல வருடங்களாக அந்த வீதியில் டிக்கெட் பெற்றுக் கொண்டும், சூப்பரண்ட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று இலவசமாக பக்தர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில் வடக்கு வாசல் வழியாக டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு பெண் ஊழியர் ஒருவர் 400 ரூபாய் கொடுத்தால் தான் அனுப்ப முடியும் என கரராக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இது குறித்து பக்தர்கள் கேள்வி எழுப்பிய போது கலெக்டர் அலுவலகத்திற்கு வேண்டுமென்றாலும் வீடியோ அனுப்பு நான் 20 வருடமாக பல பேரை பார்த்தவர் சூப்பிரண்டு சொல்வதை தான் நான் செய்கிறேன் என அதிகாரத் தோணியில் பேசுகிறார்.

சமயபுரம் கோவில் வடக்கு வாசல் பகுதி என்பது தமிழக அரசால் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் உள்ளே செல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வழியாகும், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுவது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேல் அதிகாரி சொன்னது தான் நான் செய்கிறேன் என்று அழுத்தமாக கூறிய
ஊழியர் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா, அல்லது நிர்வாகம் சொல்லி தான் அந்த ஊழியர் செய்தாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது இது குறித்து தமிழக அரசு கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியரிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோவில் பக்தர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து சோழன் பார்வை செய்து குழுவினர் சமயபுரம் கோவில் உயர் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பேசுவையில் நாங்கள் விற்பனை செய்ய சொல்லவில்லை இது வேண்டுமென்று திட்டமிட்டு வீடியோ எடுத்து பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்,
அதற்கு நீங்கள் சொல்லாமல் உயர் அதிகாரி தான் விற்பனை செய்ய சொன்னார் என்று பெண் ஊழியர் ஒருவர் வீடியோவில் பேசுகிறார் என்று கேள்வி எழுப்பியதற்கு
சமயபுரம் கோவில் அதிகாரி இல்லை சார் அது வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தொலைபேசி துண்டித்து விட்டார்
இதுகுறித்து தமிழக அரசு விரைவில் விசாரணை மேற்கொண்டு சமயபுரம் கோவிலில் நடக்கும் குளறுபடிகளை கண்டுபிடிக்குமா?
சோழன் பார்வை
ஆசிரியர்


Comments are closed.