தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம், ஆசிரியர்கள் கைது

- Advertisement -

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம், ஆசிரியர்கள் கைது

- Advertisement -

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதிய குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி கலைக்கப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலை முறை ஊதியம் வழங்கிட வேண்டும். குறிப்பாக அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்