திருச்சி தென்னூர் ஹை ரோடு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி & டிரஸ்ட் போர்டு சார்பில் நபிகள் நாயகம் மீலாது விழா மற்றும் விஸ்தரிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. பள்ளிவாசல் தலைமை இமாம் ஹசன் முகம்மது பாகவி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஹாஜி ஜமீர் பாஷா கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அரசு டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான், மமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது உள்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்….
வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல், முன்பு கோவிலாக இருந்தது என்று மீண்டும் ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. 1991 வழிபாட்டுத்தலங்கள் சிறப்பு விதி சட்டம் மிக தெளிவாக பாபரின் பள்ளிவாசலை தவிர 1947 ஆம் ஆண்டு யார் யார் வசம் எந்த வழிபாட்டுத்தலம் எந்த நிலையில் இருந்ததோ, கோவிலாக இருந்தது கோவிலாகவும், பள்ளிவாசலாக இருந்தது பள்ளிவாசலாகவும், சர்ச் ஆக இருந்தது சர்ச் ஆகவும், தொடர வேண்டும் என அந்த சட்டம் தெளிவாக குறிப்பிடுகிறது. அது மட்டும் அல்லாமல் இது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் தொடுக்கக் கூடாது என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இன்றைய ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகிறது. அதனுடைய எடுத்துக்கட்டாகத்தான் 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துள்ளது. இந்த ஆட்சியில் 75 வது குடியரசு தினத்தை கொண்டாடினோம். இந்த குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு மையப் பொருளாக இருக்கக்கூடிய அரசியல் சாசன சட்டத்தை பாஜக அரசு சிதைத்து வருகிறது. அதன் மாண்புகளை கெடுத்து வருகிறது. எனவே ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மதசார்பின்மையை காப்பாற்றுவதற்கு நாட்டில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு ஆட்சி மாற்றம் மிக மிக அவசியம்.
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. அந்த கூட்டணியை குழப்ப பாஜக வதந்திகளை கிளப்புகிறது. அதிக நாடாளுமன்றத்தை அனுப்பக்கூடிய உத்தர பிரதேசத்தில் சமாத்வாஜி கட்சி காங்கிரஸ் கட்சி தேர்தல் உடன்பாட்டிற்கு வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. அதேபோல மேற்கு வங்காளத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். நிதிஷ்குமார் உள்ளுக்குள் இருந்து அவர் ஒரு சுயநலவாதி என மீண்டும் நிறைவேற்றி இருக்கிறார். அங்கிருந்து வரக்கூடிய தகவல்கள் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற செய்தியும் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. பாஜக பரப்பி வரக்கூடிய வதந்தியாக இருக்கிறது. இன்றைக்கு கூட இந்தியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி, அதேபோல காங்கிரஸ் கட்சியும் உத்தரபிரதேசத்தில் தொகுதி உடன்பாடு எட்டி இருக்கிறது. இதேபோன்று மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள் என தெரிவித்தார்.