- Advertisement -

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சியில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணி!

0

- Advertisement -

19 ஆம் ஆண்டு சமரச தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணா்வுப் பேரணியானது நீதிமன்றத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை சென்றுவிட்டு, மீண்டும் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நிறைவுற்றது.

Bismi

பேரணியில் அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், மத்தியஸ்தா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.

Vagai

பேரணிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சமரச தீா்வு மைய ஒருங்கிணைப்பாளரும், சாா்பு நீதிபதியுமான ஏ.பி. நசீா் அலி மற்றும் தீா்வு மையப் பணியாளா்கள், சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியாளா்கள் செய்தனா்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்