வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்த்!
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்த்!
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ,நான் நடிப்பையும் சினிமாவையும் காதலிக்கிறேன், 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகனாக, ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன் எனக் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட
விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெற்றன.இந்நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று நிகழ்வில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் வாழ்நாள் சாத்தையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். விருது பெற்றது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. நான் நடிப்பையும் சினிமாவையும் காதலிக்கிறேன். 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகனாக, ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல். முருகன், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.


Comments are closed.