- Advertisement -

ராகுல் காந்தி பிறந்த நாள் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்!

0

- Advertisement -

ராகுல் காந்தி எம்.பியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி, பல்வேறு வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடு செய்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முன்னதாக ராகுல் காந்தி பிறந்தநாளை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Bismi

Vagai

நிகழ்விற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, திருச்சி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், திருச்சி மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன் மற்றும் காங்கிரஸ் கோட்டத் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்