ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோ ஆகுங்க ஹர்ஷமித்ரா மருத்துவமனை விழிப்புணர்வு நிகழ்ச்சி இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்பு
ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோ ஆகுங்க ஹர்ஷமித்ரா மருத்துவமனை விழிப்புணர்வு நிகழ்ச்சி இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்பு
மே 31 ஆம் தேதி உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு WHO நிறுவனம் பரிந்துரைத்துள்ள விழிப்புணர்வு கருப்பொருள் “UNMASKING THE APPEAL!” – தமிழில் “கவர்ச்சி உதிர்த்தெழும் உண்மை!” அதாவது புகையிலைப் பொருட்கள் அதன் உட்பொதிந்த ஆபத்துக்களை மறைத்து, வெளிப்புற சுவர்ச்சியின் மூலம் மக்களை ஈர்ப்பதைக் குறித்து எச்சரிக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக புகையிலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது ஹர்ஷமித்ரா மருத்துவமனை அதில் இந்த வருடமும் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோ ஆகுங்க என்ற புகையிலை உபயோகம் மற்றும் அதன் ஆபத்துக்கள் மற்றும் நீங்குகள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்து அனுப்பும் போட்டியை நடத்தியது இதில் பொதுமக்கள் ஆசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவர்கள் என 150 க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறும்படங்கள் தயாரித்து அனுப்பியிருந்தனர் இந்த 150 ரில்களில் இருந்து சிறந்த ரிலை இயக்குனர் திரு சீனு ராமசாமி அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விழா நடைபெற்றது இதில் சிறந்த 50 ரீல்கள் இயக்குனர் அவர்களின் முன்பாக திரையிடப்பட்டது.
இந்த விழாவில் மக்கள் இயக்குனர் சீனு ராமசாமி (விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ திரைப்பட இயக்குநர்) சிறப்பு விருந்தினராக பங்கேற்று,
பட குறும்படங்கள் அனுப்பிய படைப்பாளிகளுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார் மேலும் முதல் பரிசை வென்ற வெற்றியாளருக்கு ரூபாய் 10,000 பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவுக்கு சிறப்பூட்டினர்.டாக்டர் அர்ஷியா பேகம், துணை முதல்வர், KAP விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி RC. உதயகுமார், சேர்மன், மதர் தெரசா கல்வி நிறுவனங்கள் முனைவர் இரா செந்தாமரை, முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி முனைவர் ரூபா, முதல்வர், மாரியம்மன் செவிலியர் கல்லூரி.திரு. G. ராஜசேகரன், செயலாளர், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள்.SP.N. காணிக்கை பர்வீன் மேரி செர்வைட் செவிலியர் கல்லூரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கோவிந்தராஜ் வரவேற்புரை யாற்றினார் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணரும் செயல் இயக்குநருமான டாக்டர் சசிப்பிரியா நன்றியுரை ஆற்றினார்.
இவ்விழா மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற்றது.
சமூக நலனுக்காக புகையிலை ஒழிப்பில் பங்களிக்கும் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டு விழிப்புணர்வு பரப்பும் முயற்சியில் இணைந்து, புகையிலையற்ற நலம் நிரம்பிய சமுதாயத்தை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த விழா ஏற்படுத்தியது இவ் விழாவினை ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.
Comments are closed.