புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது – ஊர்வலமாக வந்து மனு அளித்த பொது மக்கள்!

திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் புங்கனூர் கார்த்திக் தலைமையில் பொது மக்கள் திரண்டு ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர்.

- Advertisement -

மேலும் இது குறித்து ஒன்றியக் குழு உறுப்பினர் கார்த்திக் கூறுகையில்….

கிராமப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி விவசாயம் முற்றிலும் அழிந்து விடும். வீடு மற்றும் நிலத்தின் வரியினங்களும் உயரும். இதனால் நடுத்தர மற்றும் எளிய மக்கள் பாதிக்கப்படுவாா்கள். எனவே எங்கள் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்