மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!
மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!
திருநெல்வேலி,நவம்பர்12:-

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன.
அதன்படி, இன்று (நவம்பர்.12) புதன்கிழமை காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகில் உள்ள, “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் முகாம்” நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் ஆறு நபர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மனுக்களை, “நெல்லை மாநகர் காவல் ஆணையர்” சந்தோஷ் ஹாதிமணியிடம், நேரில் கொடுத்தனர்.
“பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது, சரியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்!”- என மனுதாரர்களிடம், “காவல் ஆணையர்” சந்தோஷ் ஹாதிமணி, “உறுதி” அளித்தார். இந்த முகாமில், “காவல் துணை ஆணையர்கள்” மேற்கு மண்டலம் V.பிரசண்ணகுமார், கிழக்கு மண்டலம் V.வினோத் சாந்தாராம், தலைமையிடம் S.விஜயகுமார் ஆகியோரும், கலந்துகொண்டனர். இதுபோல, பாளையங்கோட்டை “மிலிட்டரி லைன்” பகுதியில் உள்ள, “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” அலுவலகத்திலும், இன்று ( நவம்பர். 12) “மக்கள் குறை தீர்க்கும் முகாம்” நடைபெற்றது. “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை. சிலம்பரசன், இந்த முகாமில் பங்கேற்று, மொத்தம் 18 நபர்களிடமிருந்து, “நேரடியாக” மனுக்களை பெற்றுக் கொண்டு, அவற்றின் மீது” முறையாக நடவடிக்கை எடுக்கப்படும்!” என்று, “உறுதி” அளித்தார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.