தனியார் நகை அடகு நிறுவனம் நகை மோசடி – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு
தனியார் நகை அடகு நிறுவனம் நகை மோசடி – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு
திருச்சி மாநகரம் பீமா நகர் அருகே உள்ள மார்சிங் பேட்டை பகுதியில் தனியார் நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது, அங்கு இசக்கி என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு 36 கிராம் நகையை அடகு வைக்க சென்றுள்ளார். அப்போது அவருடைய சிபில் ஸ்கோரை பரிசோதனை செய்த அந்த நகை அடகு கடையை சேர்ந்த பாத்திமா என்பவர் உங்கள் பெயரில் நகை அடகு வைக்க முடியாது எனக்கூறி தனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார் அவர் பெயரில் வைத்துக் கொள்கிறோம். அதற்கான வட்டியையும் அசல் தொகையும் நீங்கள் கட்டி விடுங்கள் என தெரிவித்துள்ளார் அதற்கு இசக்கி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் என்பவரை அழைத்து அவர் பெயரில் அடகு வைத்துள்ளனர்.
அந்த நகைக்கு ஓர் ஆண்டுக்குப் பின்பு தான் வட்டி கட்ட வேண்டும் அதுவரை வட்டி கட்ட தேவையில்லை என அந்த நகை அடகு கடையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நகை அடகு வைத்து ஏழு மாதத்திற்கு பின்பு அதனை முழுமையாக மீட்கலாம் என இசக்கி அண்ணன் நகை அடகு கடைக்கு சென்றபோது தற்போது அதை மீட்க முடியாது எனக்கூறி தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக இது குறித்து கேட்ட பொழுது உரிய பதிலளிக்காமல் இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விசாரித்ததில் அந்த நகையை தாஸ் என்பவர் பெயரில் மாற்றி தாஸ் அந்த நகையை வாங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர்,
இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கி மற்றும் அவருடைய குடும்பத்தினர் இன்று தங்களுடைய நகையை திருப்பி தர வேண்டும் எனக் கூறி அந்த நகை அடகு கடை முன்பு குவிந்தனர். அப்போது அந்த நிறுவனத்திற்கும் இசக்கி குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அந்த நகையை திருப்பித் தருகிறோம் என தெரிவித்தும் தங்களுக்கு இதுவரை தரவில்லை இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்க உள்ளோம் என இசக்கி தரப்பினர் தெரிவித்தனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி.
ஐயப்பன் (பாதிக்கப்பட்டவர்)
Comments are closed.