உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு .
லட்சம் பேர் கீதை வாசிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு .
லட்சம் பேர் கீதை வாசிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பிரதமருக்கு, மக்கள், கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உடுப்பி கிருஷ்ணன் கோவில் உள்ளது.உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அவர் லட்ச காண்ட பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.கர்நாடகா மாநிலம் உடுப்பிக்கு இன்று (நவம்பர் 28)பிரதமர் மோடி வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தங்க தீர்த்த மண்டபம் வழியாக கிருஷ்ண மடத்தின் மடாதிபதி தீர்த்த சுவாமிகளை சந்தித்து தீர்த்த பிரசாதம் பெற்றார். மடத்தில் நடந்த லட்ச காண்ட கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.


Comments are closed.