திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே ஏழுமலையான் கோவிலில் பணிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.