திருச்சியில் பிரதமர் மோடி ROAD SHOW – பாஜகவினர் உற்சாக வரவேற்பு

- Advertisement -

திருச்சியில் பிரதமர் மோடி ROAD SHOW – பாஜகவினர் உற்சாக வரவேற்பு.

 

தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக வருகை தந்துள்ள பிரதமர் மோடி திருச்சியில் தங்கி இருந்தார். திருச்சி ராஜா காலணியிலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார். அப்பொழுது வழிநெடுங்கிலும் உள்ள பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

 

மேளதாளம் முழங்க சாலைகளில் பூக்களை தூவி தற்போது வரவேற்பு அளித்து வருகின்றனர். பாரத பிரதமரை வழியனுப்பும் விதமாக அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

- Advertisement -

தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில்

ராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

 

அதன் பின்னர் அங்கிருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்து இங்கிருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்