திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு காந்தியடிகள் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அதில்,…
திருச்சி என்றாலே எப்போதும் தனித்துவம் தான். காவிரி ஆறும் இங்கு உள்ள கட்டமைப்பும் தான் நமக்கு உத்வேக திறமைகளை கொடுக்கிறது. இதுவே கலாச்சாரத்தை கல்வியை தேசிய நலன் மீது உணர்வை நமக்கு ஏற்படுத்தி தந்து இருக்கிறது.
டிஜிட்டல் பொருளாதாரம் என்று எடுத்துக் கொண்டாலே அது அமெரிக்காவா இருக்குமோ அல்லது ஜெர்மனியாக இருக்குமோ என்று நமது மக்கள் மனநிலையில் எண்ணுகிறார்கள். ஆனால், இந்தியா தற்போது முழுமையான டிஜிட்டல் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கி வருகிறது. அதனை அனைவரும் அங்கீகாரிக்கின்றனர்.
ஜி-20 மாநாடு இந்த முறை பிரேசிலில் நடக்கிறது. பிரேசில் பிரதமர் இந்தியாவில் நடந்த கட்டமைப்பை போல் எங்களால் ஜி-20 ஐ ஏற்படுத்த முடியுமா என்று தெரியவில்லை என்று பேசியிருக்கிறார். இந்தியாவில் அந்த அளவிற்கு ஜி20 மாநாடு மிகச் சிறப்பாக கடந்த ஆண்டு நடைபெற்றுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் கூட தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் நமது டிஜிட்டல் டெக்னாலஜி மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருந்தது. சாதாரண பாமர மக்கள் கூட டிஜிட்டல் டெக்னாலஜியை மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் நாம் உருவாக்கி தந்திருக்கிறோம்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வாயிலாக அனைத்துவித மக்களும் எந்தவித தடையும் இன்றி மருத்துவம், கல்வி போன்ற பல வகையில் பலன் பெற வழிவகை செய்துள்ளோம். இதனை மற்ற நாடுகள் இவ்வளவு மக்கள் தொகை உள்ள ஒரு நாடு எப்படி இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது என்று ஆச்சரியமாக பேசுகிறார்கள்.
ஆண்களை விட பெண் எப்படி சரி வருவார் என்கிற எண்ணம் மாற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் முன்னேற வேண்டிய மாவட்டங்களாக கருதப்படும் நிலையில், இதுபோன்று இந்தியா முழுவதும் உள்ள பின் தங்கிய மாநிலங்களை முன்னேற்றுவதே பிரதமர் மோடியின் குறிக்கோளாக உள்ளது.
ஆண்கள் கோபித்து கொள்ள வேண்டாம். ஆண் பெண் பாலின பாகுபாடு இன்றளவும் உள்ளது. அதனை போக்கும் நடவடிக்கைகளில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். கிராமப்புற பெண்களுக்கு தகுதியும், வாய்ப்பும் ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது.
அரச மரத்தின் அடியில் தான் புத்தருக்கு ஞானம் கிடைத்தது. அரசமரம் நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம். வரும் 2047 முன்னேற்றம் அடைந்த நாடாக மாற்றுவதில் அனைவருக்கும் பங்கு உண்டு. அதற்கான உறுதிமொழியை நாம் ஏற்க வேண்டும்.
கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வசதிபடைத்த நாடாக விளங்கியது. காந்தி இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். நாம் இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக போராடுகிறோம் என தெரிவித்தார்.