மோடி அவர்களின் பெயரில் பொங்கல் விழா,அரசியல் விழா அல்ல-தமிழிசை சௌந்தரராஜன்
மோடி அவர்களின் பெயரில் பொங்கல் விழா,அரசியல் விழா அல்ல-தமிழிசை சௌந்தரராஜன்
இன்று நடைபெற்றது பொங்கல் விழா,அரசியல் விழா அல்ல, பொங்கல் விழா மட்டுமே என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார் .
தமிழக பாஜக முன்னாள் தலைவரும்,முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :

மோடி அவர்களின் பெயரில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. அதில் அமித்ஷா பங்கேற்றது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
அமித்ஷா வருகையால் இந்தியா கூட்டணி பலமடையும் என்று செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். இதிலிருந்து செல்வப்பெருந்தகைக்கு அவரது தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை நம்மால் புரிந்துக்கொள்ளமுடிகிறது. அமித்ஷா வந்து தான் இந்தியா கூட்டணியையும் பலப்படுத்த வேண்டுமா? அமித்ஷா வருகையால், இந்தியா கூட்டணி பலவீனம் அடையும் என்பதை அவர் மறைத்து பேசி வருகிறார்.

தேசிய ஜனநாயக் கூட்டணி கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவார்கள்.
இன்று நடைபெற்றது பொங்கல் விழா,அரசியல் விழா அல்ல, பொங்கல் விழா மட்டுமே என்றார்.
எஸ்.பி வேலுமணி வருகை புரிந்துள்ளது தொடர்பான கேள்விக்கு?
கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துக்கொள்வது வழக்கமான ஒன்று என்றார்.
இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார் .





Comments are closed.