- Advertisement -

திருச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் – 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

1

- Advertisement -

திருச்சி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ரிஹாப் இந்தியா டிரஸ்ட் இணைந்து மண்ணை மலடாக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கு, கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கை ஏற்படுத்தும் நெகிழி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணா்வு மாரத்தான் நடைபெற்றது. 5 கிலோ மீட்டா் வரையிலான இந்த மாரத்தான் 15 வயதுக்குள்பட்டோா், 15 வயதுக்கு மேற்பட்டோா் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

Bismi

Vagai

திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் நீதிமன்ற சாலை, பாரதிதாசன் சாலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. மாரத்தான் ஓட்டத்தை வருவாய் கோட்டாட்சியா் அருள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய துணை பொறியாளா் சிவரஞ்சனி, என்ஜிஓ நிா்வாகி சக்திவேல் ஆகியோா் பங்கேற்று தொடங்கி வைத்தனா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
1 Comment
  1. mitolyn says

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்