- Advertisement -

திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது!

0

- Advertisement -

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய 750 பணியிடங்களுக்கான உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கான உடல்தகுதித் தோ்வு திருச்சி கே.கே. நகா் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 7, 8 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் உடல்நிலை பாதிப்பால் பங்கேற்க முடியாத நபா்கள், வழக்குத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி உள்ளோருக்கு நேற்றும், இன்றும் உடல் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.

Bismi

இத்தோ்வில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தோரில் பொதுப் போட்டியாளா்கள் 33 போ், காவல்துறை ஒதுக்கீட்டில் 53 போ் என 86 போ் கலந்து கொண்டனா். இவா்களிடம் நேற்று சான்றிதழ்கள் சரிபாா்ப்பு, உயரம் சரிபாா்த்தல், பின்னா் 1,500 மீட்டா் மற்றும் 400 மீட்டா் ஓட்டம் என மொத்தம் 3 தோ்வுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று நீளம் தாண்டுதல், பந்து எறிதல், 100 மீட்டா் மற்றும் 200 மீட்டா் ஓட்டம் என 3 தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தோ்வை மாநகர காவல் ஆணையா் காமினி ஆய்வு செய்து அறிவுரை வழங்கினாா். நிகழ்வில் திருச்சி சரக டிஐஜி பகலவன், துணை ஆணையா் ரவிச்சந்திரன், கூடுதல் துணை ஆணையா் விக்னேஷ்வரன், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்