சமூக ஆர்வலர்கள் மீது அவதூறு வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட எஸ்.பி.யிடம் மனு!

0

திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சி அண்ணாநகர் பகுதி கிராம தலைவர் தேவராஜ் மற்றும் ராஜீவ் காந்தி மற்றும் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது….

- Advertisement -

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்குறிச்சி கிராமத்தில் 365 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இராணி மங்கம்மா மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தை இடித்து விட்டனர். நாங்கள் எந்த ஒரு பிரதிபலன் இல்லாமல் ஊர் பொதுமக்கள் ஆதரவுடன் அரசுக்கு ஆதரவாகவும், இராணி மங்கம்மா மண்டபத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்களையும், இடித்தவர்களையும் கைது செய்ய வேண்டியும், அந்த இடத்தை மீட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வேண்டி வலியுறுத்தியும், கடந்த 19.07.2024 அன்று ஜங்சன் காதி கிராப்ட் அருகே தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். மேலும் காவல்துறையும், மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தை மீட்டு தருகிறோம் என்று கூறியதன் பெயரில் போராட்டம் நிறைவு பெற்றது. இதன் பிறகு என்னுடைய பொது வாழ்வில் களங்கம் ஏற்படும் வகையில் ஊடகங்களில் பொய் செய்தி பரப்பி வரும் பெர்னாட், மற்றும் ஜாக்கப், இருவரையும் கைது செய்ய வேண்டியும், அரசுக்கு சொந்தமான இடத்தை அபகரிப்பவர்களை நில மோசடி வழக்கில் கைது செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அண்ணா நகர் பகுதி கிராம தலைவர் தேவராஜ், சாமானிய மக்கள் நலக் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப், சாமானிய மக்கள் நலக் கட்சி ஷைனி, சமூக ஆர்வலர்கள் முத்துராமன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்