பெரியார், அண்ணா வளர்த்த திமுக கட்சி, இன்று காவாலையா என குத்து பாட்டில் வந்து நிற்கிறது – திருச்சியில் அதிமுக தலைமை கழக பேச்சாளர், நடிகை விந்தியா பேச்சு.

0

பெரியார், அண்ணா வளர்த்த திமுக கட்சி, இன்று காவாலையா என குத்து பாட்டில் வந்து நிற்கிறது – திருச்சியில் அதிமுக தலைமை கழக பேச்சாளர், நடிகை விந்தியா பேச்சு.

அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருவெறும்பூரில் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் தலைமையில், திருச்சி, காட்டூர் மற்றும் திருவெறும்பூர், பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து கண்டன தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றது.

இதில் … அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமான திரைப்பட நடிகை செல்வி.விந்தியா கலந்து கொண்டு கண்டன சிறப்புரை ஆற்றினார்..

அப்போது பேசிய அவர் பேசியது:

ஆளத் தெரியாத திமுக, சேலத்தில் நடத்தியது பொழுது போக்கு நிகழ்ச்சி ஒன்று, அதுதான் திமுகவின் இளைஞர் அணி மாநாடு.

அந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சீட்டு விளையாடி திமுக உடன் பிறப்புகள் சொன்னது. ஜோக்கர் வரவில்லை என்றார்கள். ஆனால் மற்றொரு உடன்பிறப்பு சொன்னார் உனக்கு ஜோக்கர் வரவில்லை என்றால் என்ன.. ஸ்டேஜை பார் 13 ம் ஜோக்கர் என கூறும் அளவிற்கு இருந்தது திமுகவின் இளைஞர் அணி மாநாடு.

சேலம் திமுக மாநாடு கின்னஸ் மாநாடு அல்ல அது சர்க்கஸ் மாநாடு.

பெரியார், அண்ணா வளர்த்த திமுக கட்சி, இன்று காவாலையா என குத்து பாட்டில் வந்து நிற்கிறது.

இதற்கு இரண்டாம் கருணாநிதி, மூன்றாம் கருணாநிதியை குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை.

ஏனென்றால், முதல் கருணாநிதி மாநாட மயிலாட நிகழ்ச்சி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர் இந்த லட்சணத்தில், 4 ஆம் கருணாநிதி இன்பநிதி வரை மாநாட்டிற்கு வந்து, இது கட்சி மாநாடா குடும்ப கும்பாபிஷேக மாநாடா என்று தெரியாத அளவிற்கு இருந்தது.

திமுக உடன் பிறப்புகள், இன்னும் கருணாநிதி குடும்பத்தின் எத்தனை வாரிசுகளுக்கு பல்லாக்கு தூக்கப் போகிறார்கள் என தெரியவில்லை.

வாரிசு ஆட்சி நடத்துகிறீர்களே என்றால்.. எங்களால் முடியும் என வாய்ச்சவடால் பேசுகிறார்கள்.

பன்னிக் கூட தான் ஒரே பிரசவத்தில் பத்து குட்டி போடுது அதையெல்லாம் ஒன்றும் தகுதி என எடுத்துக் கொள்ள முடியாது.

காங்கிரஸ் கட்சியில் நேருக்கு பிறகு இந்திரா காந்தி வந்தபோது இது என்ன சங்கர மடமா என கிண்டல் செய்த திமுக வினர் எங்கே.

இப்போது திமுக தலைமை என்ன செய்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் கொத்தடிமையாக்க வேண்டும் என திமுக நினைக்கிறது. அதனை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டும், எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சும்மா இருக்க மாட்டார் ஒவ்வொரு தவறுக்கும் நிச்சயமாக தண்டனை உண்டு.

விளம்பரத்திற்காக நடத்தியது திமுக மாநாடு. 10 லட்சம் பேருக்கு உணவளித்ததாக சொல்கிறார்கள். .

திமுகவிடம் இத்தனை ஆட்கள், அம்பு, சேனை இருந்த போதும், மிக கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோறு போடலை, தெருவிற்கு 10 பேருக்கு சாப்பாடு போட்டீர்களா?
போடவில்லையே ஏன்? பணம் இல்லையா? உதவும் மனம் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

நம்பி வாக்களித்த மக்களுக்கு, சோறு போட துப்பில்லாத, வக்கில்லாத திமுக அரசு. 10 லட்சம் பேருக்கு உணவளித்ததாக மார்தட்டிக்கொள்கிறது. ஆனால் அத்தனை நாற்காலிகளும் காலியாக இருந்தது.

திமுக மக்களை பற்றி கவலை பட மாட்டார்கள், அவர்கள் கவலையெல்லாம் கஜானா மீது தான் இருக்கும்.

பொம்மை அரசாங்கத்தை நடத்துகிறார் ஸ்டாலின்.
கேளம்பாக்கம் பிரச்சனை, வெள்ள நிவாரணம் அனைவருக்கும் போய் சேராதது, சென்னை மாநகராட்சியில் பிரச்சனை, ராமர் கோவில் திறப்பு அன்று பிரச்சனை என அனைத்திற்கும் சேகர் பாபு பேட்டி தருகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலினா? சேகர்பாபு வா? – என கேள்வி எழுப்பினார்.

அத்தனை துறைக்கும் ஒருவர் பதில் சொல்கிறார் என்றால் அவர் முதலமைச்சராக தானே இருக்க முடியும். ஆனால் ஸ்டாலின் பொம்மை போல் நிற்கிறார்.

மறைந்த தமிழக முதல்வர் அம்மாவாகட்டும், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆகட்டும் கேட்கின்ற கேள்வி எதற்கும் பதில் அளிப்பார்கள்.

ஏனென்றால், நாங்கள் நடத்தியது மம்மி ஆட்சி – இப்ப நடப்பது டம்மி ஆட்சி.

கவர்ச்சி திமுக மாநாட்டில் தீர்மானம் போட்டார்கள்.. தீர்மானம் ஒன்று மகன் அப்பாவுக்கு வாழ்த்து சொல்வது, தீர்மானம் 2 அப்பா மகனுக்கு வாழ்த்து சொல்வது, பேரன் தாத்தாவுக்கு வாழ்த்து சொல்வது, அண்ணன் தங்கைக்கு வாழ்த்து சொல்வது என

இப்படி குடும்பத்திற்குள் வாழ்த்து சொல்லி நடந்தது திமுக மாநாடு.

உடன்பிறப்புக்கு என்ன கிடைத்தது. பிரியாணி டப்பாவும், ஒரு கவர்ச்சி நடனமும் தான்.

திமுகவினரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, திமுக “உபிஸ்” எல்லாம் ஒரு தனி பிறவிகள்.

செந்தில் பாலாஜி திருடன் நான் ஆட்சிக்கு வந்தால் சிறைக்கு அனுப்புவேன் என்றார்.
ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகளில் நிறைவேற்றியது. இது ஒன்றை மட்டும் தான்.

- Advertisement -

நீட், ஜல்லிக்கட்டு தடையை கொண்டு வந்தது. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தான். திமுக காரன் கை தட்டுகிறான்.

பால்டாயில் பாய் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஒழிப்போம் என்கிறார் அதற்கும் கை தட்டுகிறார்கள் திமுகவினர்.

கருணாநிதி திருக்குவளையில் பிறக்கும் பொழுது அவர் ஒரு தெரு பாய் – அதே கருணாநிதி இறந்து மெரினாவில் புதைக்கப்படும் பொழுது அவர் ஒரு திருபாய்.

திருபாய் அம்பானி போல் அவர் புதைக்க எத்தனை பேரை மிதிச்சிருப்பார், எத்தனை குடும்பங்களை வாட்டி வதைத்திருப்பார்.

ஆனால், அம்மா, எடப்பாடியார் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் தூங்காமல் பணியாற்றினார்கள்.. விடியா திமுக ஆட்சியில் திமுக அமைச்சர்களால் ஸ்டாலின் தூங்காமல் தவிக்கிறார்..

ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளில் அவர் நிறைவேற்றியது இந்த வாக்குறுதியை மட்டும் தான்.

சீண்டி பார்க்காதீர்கள், நோண்டி பார்க்காதீர்கள் என்றீர்கள்.

இப்ப பொன்முடி ஜெயிலு, பெயிலு.

குடை என்றால் கருப்பு அல்லது கலர் கலரான குடை கிடைக்கும்.

வெள்ளை குடை பார்த்திருக்கிறீர்களா?

வெள்ளை கொடி காண்பித்தால் அசிங்கம் என அந்த வெள்ளை குடையை ‘சமாதானம் பேசுகிறார். இவர் சர்வாதிகாரி என பேசிக் கொள்கிறார் ஸ்டாலின்.

இந்தி தெரியாது போடா என்ற திமுக கேலோ இந்தியா என இந்தி மொழியில் அழைப்பு விடுக்கிறார். மத்திய அரசு மாநாட்டில் இந்தி பெயர்.

போதுமான நேரம் கொடுக்க வில்லை என மாநாட்டில் இருந்து வெளியே வந்தார் அம்மா.

சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு என்பது போல காசு வாங்குவதிலையே குறியாக இருக்கிறார் ஸ்டாலின்.

அதிமுக காலத்தில் 3 லட்சம் கோடியக இருந்த கடன் 2015 தானே புயல், ஒக்கி புயல், கஜா புயல் வந்த போதும், ஏதாவது திட்டத்தை நிறுத்தினோமா ? கொரோனா காலத்தில்

2 1/2 ஆண்டில் திமுக வாங்கியுள்ளது.
4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அதை குறைப்போம், இதை குறைப்போம் என்றவர்கள் .
மின்சார கட்டணம் உயர்வு,மக்களை வதைக்கும் சொத்து வரி உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு, அரிசி கிலோவிற்கு 10 ரூபாய் உயர்வு,

ஸ்டாலின் நடத்துவது இதுவா திராவிட மாடல் அரசு ? இது தரித்திர மாடல் அரசு.

திருட்டு வாட்ச் மேன் வேலை பார்க்கிறார் மகேஷ் பொய்யாமொழி. ஹீரோயினை தூக்கி கொண்டு போனாலும் கூடவே போகிறார். செங்கல்லை தூக்கி கொண்டு போனாலும் போகிறார், மகேஷ் பொய்யாமொழி அவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராம். தனது சொந்த துறையை பார்த்துக் கொள்ளவே
துப்ப இல்ல.
இதில் , உதயநிதி துறைக்கு பினாமியாம்.
+ 12 தேர்வை சொன்ன தேதியில் நடத்த முடியாதவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி.

டி.ஆர் பாலு எடுபுடி வேலை பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சியில் ஏதாவது புதிய திட்டம் உண்டா? அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் திமுக ஆட்சி காலத்தில் நிறுத்திவிட்டனர்.

முதலீட்டாளர்கள் மாநாடு பெரிய பணக்காரர் ஸ்டாலின்
உம் செல்றியா மாமா – என குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள்
அம்பானிய கூட்டி வராமல், ஆன்ட்ரியாவ கூட்டி வந்துள்ளனர்.

திமுக ஆட்சி பெஃயிலு, அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலு, கிடைக்குமான்னு அலைகிறார்கள் பெயில்.

விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், எங்கு போனாலும் கைகளை கட்டி கொண்டு இருக்கிறார். தனது கை ஆட்டத்தால் மைக்கை தட்டி விடுவோமோ என அச்சம்.

எம்ஜிஆர் குண்டடி பட்டு மருத்துவமனையில் கிடக்கும் போதும், ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போதும் ஏளனமாக பேசியவர்கள் திமுகவினர்.. மரியாதை கொடுத்தா தான், மரியாதை கொடுக்க முடியும், திமுக காரர்களுக்கு என்றைக்கும் மரியாதை கொடுக்க முடியாது.

தமிழ்நாட்டை
30 வருடம் ஆளும் கட்சி, திருட்டு திமுக எப்படி ஆட்சிக்கு வந்தது ?

பொங்கலுக்கு பணமும், பொருளும் கொண்டு வந்தது தப்பா?

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி உங்களை ஏமாற்றிய திமுகவை நீங்கள் , உங்கள் வாக்குகளால் அவர்களை ஏமாற்றும் தருணம் வந்துவிட்டது என்றார்.

இந்த கூட்டங்களில் பகுதி செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர் , ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. கார்த்திக், எஸ்.எஸ். ராவணன், எஸ்.பி. பாண்டியன், சுபத்ரா தேவி , தண்டபாணி, ஏ.பி. கிருஷ்ணமூர்த்தி , மாணவர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் , சாந்தி, முன்னாள் கவுன்சிலர் இன்ஜினியர் ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்