பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல் செய்தார்!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகத்திடம் திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் ஐ.ஜே.கே நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர், கடந்த முறை நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை தொகுதிக்கு செய்துள்ளார். குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு இலவசமாக புத்தகங்கள், மேசைகள், இருக்கைகள், போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். அதே போன்று பெரம்பலூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிறுவாச்சூர் மேம்பாலம் அமைத்தல், சாலை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஆகையால் வருகின்ற தேர்தலில் மாபெரும் வாக்கு விசாரித்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ஐஜேகே கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.