திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!


தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி, மாநிலம் முழுவதிம் உள்ள மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகங்களில், புதன்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்கள், நடைபெற்று வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி வழிகாட்டுதல்படி , இன்று (அக்டோபர். 8) புதன் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடைபெற்றது. இதில் மொத்தம் 15 மனுதாரர்கள் கலந்து கொண்டு, கோரிக்கை மனு அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர்கள் மேற்கு மண்டலம் டாக்டர் வி. பிரசன்ன குமார், கிழக்கு மண்டலம் வி. வி.வினோத் சாந்தாராம் ஆகியோர், மனுக்களை பெற்றனர்.இதுபோல, பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் ண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. இதில், மொத்தம் 16 மனுதாரர்கள் கலந்து கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.