நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்! மாநகர மக்களிடமிருந்து, நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றனர்!
நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்! மாநகர மக்களிடமிருந்து, நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றனர்!

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் வைத்து, இன்று (செப்டம்பர். 16) காலையில் “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல உதவி ஆணையாளர் மகாலெட்சுமி ஆகியோர் பங்கேற்று மாநகர மக்களிடமிருந்து, நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

13-வது வார்டு கவுன்சிலர் சங்கர்
குமார் அளித்த மனுவில்,அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ஆம் தேதி, தச்சநல்லூரில் பாரம்பரிய “தசரா சப்பர பவனி” நடைபெறவுள்ளது. சப்பரங்கள் செல்லக்கூடிய, மதுரை ரோடு, சங்கரன்கோவில் ரோடுஆகிய பகுதிகளில், பாதாளச்

சாக்கடைக்காக தோண்டப்பட்ட பணிகள், முடிவு பெற்றுவிட்டதால், தோண்டப்பட்ட இடங்களில், சிமெண்ட் காங்கீரிட் சாலை அமைத்து தர வேண்டும்! என, குறிப்பிட்டுள்ளார். இதுபோல 35-வது வார்டு கவுன்சிலர்
பேச்சியம்மாள் அளித்த மனுவில், போஸ்ட் ஆபீஸ் தெருவில், பாதாளச்சாக்கடை மூடிகள் உள்ள இடத்தில், தொட்டியினை உயர்த்தி கட்டித் தர வேண்டும்! என்று வலியுறுத்தி உள்ளார். இவர்களைத்தவிர, 36-வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய்,
பேட்டை எம்.ஜி.பி 2-வது வடக்கு தெருவை சார்ந்த ஷேக்மன்சூர், தியாகராஜ நகர் 5-வது நடுத்தெருவை சார்ந்த தமிழ்செல்வன், கொக்கிரகுளம் குறுந்துடையார் புரம் கிராம மக்கள், ஆச்சிமடம் பாலாஜிநகர் ஊர் மக்கள், பாளையங்கோட்டை தெற்கு பஜாரை சார்ந்த குணசேகரன், வள்ளியூர் பசுமை இயக்க தலைவர் சித்திரை, பேட்டை எம்.என்.பி 1-வது தெற்கு தெரு பொது மக்கள், தச்சநல்லூர் பிரியா கார்டன் மக்கள் நலச்சங்கத்தினர், டவுன் மணிபுரத்தை சார்ந்த மதன்,
பாளையங்கோட்டை படப்பகுறிச்சி, சொக்கநாச்சியம்மன் கோவில் தெருவை சார்ந்த நாராயணன், பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோபாலன் கைங்கர்ய சபாவினர் ஆகியோரும், தங்களுடைய பகுதி பிரச்சனைகள் குறித்து, மனு கொடுத்துள்ளனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள், “மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!”என்று, உறுதி அளித்தனர்.இந்த
முகாமில், உதவி செயற்பொறியாளர்கள் தங்கபாண்டியன், அலெக்ஸாண்டர், ரவி, நிர்வாக அலுவலர் காசி விசுவநாதன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.





Comments are closed.