வெள்ளை மாளிகையில் விருந்து!

சவுதி பட்டத்து இளவரசரும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டனார்.

வெள்ளை மாளிகையில் விருந்து!

Bismi

சவுதி பட்டத்து இளவரசரும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டனார்.

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது, சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார். சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இவரை அழைத்துச் சென்றுள்ளார். இந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக ரொனால்டோவிற்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியல் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2022-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா லீக்கில் உள்ள அல்-நாசர் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார். அதில் இருந்து சவுதி கால்பந்து லீக்கின் முகமாக அறியப்படுகிறார். 40 வயதான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனல்டோ, அல்-நாசர் கிளப் உடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார்.அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் விளையாட போர்ச்சுகல் அணி அண்மையில் தகுதி பெற்றது. இந்த தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் நடைபெற உள்ளது. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இதுவரை இதற்கு 34 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. அதில் அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, போர்ச்சுகல், ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, ஈக்குவேடார், பராகுவே, உருகுவே, அல்ஜீரியா, கேப் வர்டி, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொரோக்கோ, செனகல், தென் ஆப்பிரிக்கா, துனிசியா, ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், கத்தார், சவுதி அரேபியா, தென் கொரியா, உஸ்பேகிஸ்தான், நியூஸிலாந்து உள்ளிட்ட தேசிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்