திருச்சி மாநகராட்சியுடன் இணைய விருப்பமுள்ள ஊராட்சிகள் இணையலாம் – விருப்பமில்லாதவர்கள் இணைய தேவையில்லை – கே.என்.நேரு பேட்டி

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளை பராமரிப்பதற்கு மருத்துவ உதவிகள் அளிப்பதற்கான 9 நடமாடும் கால்நடை மருத்துவ உதவி வாகனங்கள் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அந்த வாகனங்களின் சேவையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு,…

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் டிசம்பருக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் பருவ மழையை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, அமைச்சர்கள் உதயநிதி, துரை முருகன் உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் தலைமையில் பல்துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -

சென்னையில் உள்ள அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு வருகின்றன. சென்னை மட்டுமல்லாத அனைத்து மாநகராட்சிகளுக்கும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகரத்தை பொறுத்தவரை மழை நீர் வடிகாலில் அறிவிக்கப்பட்ட பணிகளில், 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன. சென்னையில் 20 லிருந்து 25 செ.மீ மழை பெய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஒரே நாளில் 40 லிருந்து 50 செ.மீ மழை பெய்தால் தான் தண்ணீர் தேங்குகிறது. அதுவும் எல்லா சுரங்க நடைபாதையிலும் அல்ல, கணேசபுரம் சுரங்க நடைபாதையில் மட்டும் தான் மழை நீர் தேங்குகிறது. அதுவும் அங்கு ரெயில்வே வேலை நடப்பதால் தான். தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக அகற்றவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் பொழுது அருகில் உள்ள ஊராட்சிகளில் விருப்பப்பட்டவர்கள் மாநகராட்சியுடன் இணையலாம். யாரையும் வலுக்கட்டாயத்துடன் சேர்க்கும் எண்ணமில்லை.

மாநகராட்சியில் குடிநீர் பணி, பாதாள சாக்கடை பணி, சாலை பணி உள்ளிட்டவை நடைபெறுகிறது. அருகில் உள்ள ஊராட்சிகளும் அதில் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அவர்களை மாநகராட்சி உடன் இணைக்க திட்டமிட்டோம். தங்களுக்கு மாநகராட்சியுடன் இணைய விருப்பமில்லை என்றால் அவர்களை இணைக்க மாட்டோம்.

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் கூறி உள்ளார். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை முழுமையாக வெற்றி அடைவதற்காக 100 சதவீதம் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

நெல்லை திமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. அண்ணன் தம்பிக்குள் இருக்கும் பிரச்சனையை போல் தான். அதை அவர்களே சரி செய்து விட்டார்கள் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்