இறகுப்பந்து போட்டியில், நெல்லை பேட்டை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் வெற்றி!
இறகுப்பந்து போட்டி 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு மாணவ- மாணவிகளுக்கான போட்டியானது திருநெல்வேலி புறநகர் மாவட்டம் சேரன்மகாதேவி குறு வட்ட அளவிலான “இறகுப்பந்து” போட்டிகள், மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக, நெல்லை பேட்டை நடுக்கல்லூர்,
அரசு மேல்நிலைப்பள்ளி உள்விளையாட்டு அரங்கில்,
நேற்று [ஜூலை.19] நடைபெற்றன.
போட்டிகளில் சேரன்மகாதேவி குறுவட்டத்தைச் சேர்ந்த, அரசு மேல்நிலைப் பள்ளிகள் கலந்து கொண்டன. போட்டிகளின் இறுதியில், நெல்லை பேட்டை, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் “வெற்றி” பெற்று, திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடுவதற்கு, தகுதி பெற்றனர். நிறைவாக நடைபெற்ற “பரிசளிப்பு” நிகழ்ச்சியில், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களை, பள்ளித் தலைமையாசிரியை “முனைவர்” ரோகிணி வழங்கி,வாழ்த்தும்- பாராட்டும் தெரிவித்தார். பள்ளி உதவித் தலைமையாசிரியை மைமூன் நிசா முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் “முனைவர்”வெ.பெரிய துரை, அனைவரையும் வரவேற்று பேசினார். உடற்கல்வி ஆசிரியர்கள் தேவராஜ், வேணி, செந்தில், தர்ம தாசன்,சேர்மத் துரை, கண்ணன், சுதாகர் ஆகியோர் உட்பட, ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். சேரன்மகாதேவி குறுவட்ட இறகுப்பந்து போட்டிகளுக்கான இணைச் செயலாளர் எட்வின் சுதாகர், போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கோமதிசங்கர், அனைவருக்கும் நன்றி கூறினார்.
Comments are closed.