மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த நுகர்வோர் கூட்டமைப்பு சமூக சேவகர் விருது
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த நுகர்வோர் கூட்டமைப்பு சமூக சேவகர் விருது


விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக சமூக சேவையை பாராட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த நுகர்வோர் கூட்டமைப்பு சமூக சேவகர் விருது 2024-2025 மற்றும் சான்றிதழ் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணனுக்கு வழங்கப்பட்டது.
மேற்படி விருதை விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் கணபதி, அவைத்தலைவர் சுப்பிரமணி, துணைத்தலைவர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணனுக்கு சமூக சேவகர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம், திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம்,
என்கிற 2.சங்கங்களை நடத்தி சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அதன் தலைவராக செயல்பட்டு தொடர்ச்சியாக பல்வேறு பொதுநல சேவைகளை செய்து கடந்த 12.ஆண்டுகளாக தொடர்ந்து அரசி, மளிகை பொருட்கள், வேஷ்டி சேலை உள்ளிட்டவற்றை மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும் சுற்றுச்சூழல், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நலன், முதியோர் மேம்பாடு, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண் குழந்தைகள் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபட்டு சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் சிறப்பாக சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார் என விருதை விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Comments are closed.