திருமயம் ஆலவயல் பகுதியில் சீமை கருவேல் மரங்களை அகற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்
திருமயம் ஆலவயல் பகுதியில் சீமை கருவேல் மரங்களை அகற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றிய பிடிஓ அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருமயம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆலவயல் முள்ளான் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் இணைந்து ஆலவயல் கிராமத்தில் உள்ள முள்ளான் கண்மாயில் சீமை கருவேல் மரங்கள் அடர்த்தியாக ரோட்டு ஓரங்களில் வளர்ந்து இருந்ததை, ஜேசிபி மூலம் முள் புதர்களை அகற்றி பொதுமக்களுக்கு, எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக,
திருமயம் ஒன்றிய பி டி ஓ மரக்கன்றுகளை வழங்கி மாதா கோவில் பின்புறம் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை மரக்கன்றுகள் நட்டியிருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை தருகிறது, இதற்கு முன்னணியாக முள்ளான் கண்மாய் ஆயகட்டுதாரர்கள் முழு முயற்சியில் தொண்டு நிறுவனம் போல் கவனித்து மக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் பணி செய்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


Comments are closed.