திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்!
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்பொழுது பயணி ஒருவர் கட்டிங் இயந்திரத்தில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ஒரு கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 666 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொடர்ந்து அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.