- Advertisement -

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்!

0

- Advertisement -

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் இன்று வேலை நிறுத்த போராட்டம். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றம் செய்ததை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்தும், துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக  வந்து பணிமனை நுழைவாயிலில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்