டிடிவி தினகரனின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா கள்ளிக்குடி ரயில்வே மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
ஒரே நாடு ஒரே தேர்தல் 67ல் முன்பு இருந்தது. தற்போது சாத்தியமா என்று தெரியவில்லை. எனவே, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வெள்ளம் நிவாரண பணியில் திமுகவின் நடவடிக்கையில் விளம்பரம் தான் இருக்கிறது. சொல்லிக் கொள்ளும் அளவு அவரது செயல்பாடு இல்லை.
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பேசியது குறித்த கேள்விக்கு? அவர் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார். அவருக்கு தெரிந்ததெல்லாம் துரோகம் தான். அவருடன் சேர்ந்தவர் எல்லாருக்கும் கட்சியினருக்கும் அனைவருக்கும் துரோகம் தான் செய்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பில் உள்ளதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான். பாராளுமன்ற தேர்தலில் திமுக 40 தொகுதிகள் வெற்றி பெற்றது என்றால் அது எடப்பாடி தனியாக ஆட்களை நிறுத்தியதால் தான்.
இரட்டை இலை மறைமுகமாக திமுக வெற்றிக்கு பழனிச்சாமியின் மூலம் உதவியாக இருக்கிறது.
இரட்டை இலையை மீட்க்கும் முயற்சிகள் உச்சநீதிமன்றம் சென்று விட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை துவக்கி விட்டோம். ஜனநாயக ரீதியாக நாங்கள் இரட்டை இலையையும் கட்சியையும் மீட்டெடுப்போம். அம்மாவுடைய கட்சி, இரட்டை இலை சின்னம் இன்று பலவீனமாகிவிட்டது.
பழனிச்சாமி என்ற சுயநல மனிதரிடம் மாட்டிக் கொண்டு திமுக மறைமுகமாக உதவி செய்வதன் மூலம் வலு இழந்து வருகிறது எல்லோருக்கும் தெரிந்தத உண்மை. அதில் இருக்கும் நிர்வாகிகள் தொண்டர்களும் அவரிடம் இரட்டை இலை இருப்பதற்காக காவடி தூக்கி ஏமாறி வருகின்றனர். 2026 தேர்தலில் அம்மாவின் கட்சிக்கு அவர் முடிவுரை எழுதி விடுவார். 2026 தேர்தலுக்குப் பிறகு கட்சி இல்லாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்து விடுவார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால் கைது செய்யப்படுவோம் என்பதற்காக தன்னை, குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார் . 26க்கு பிறகு அவரது உதவி திமுகவுக்கு தேவைப்படாது.
தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் வலு பெறும். திமுக என்ற தீய சக்தி ஆட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி மக்களுக்கு நல்ல ஒரு ஆட்சியை கொடுக்கும் என்று உறுதியாக பணியாற்றி வருகிறோம்.
பொதுவாக குறைந்தபட்சம் 5000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பு. அதனை இந்த அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.
திருமாவளவன் தீர்க்கமாய் கருத்தை சொல்லக்கூடியவர். சமீப காலமாக அவருடைய பேச்சு குழப்பத்தில் உள்ளது போல் தெரிகிறது. அந்த கூட்ணியில் இருந்து கொண்டு கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கின்றது, மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் அவரை சேர்ந்தவர்கள் இருந்தவர்கள் பேச்சு திமுகவுக்கும் திருமாவளவனுக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை உருவாக்கி வருகிறது. என்னதான் அவர் மறுத்தாலும் நெருப்பில்லாமல் புகையாது, கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.
திமுக வை விட பலமான கூட்டணியாக தேசிய கூட்டணி வளமாக அமையும். தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்திற்கு நிறைய போலீஸ் பாதுகாப்பு கொடுத்து தான் எடப்பாடி பழனிச்சாமி செல்ல வேண்டும். கட்சிக்காரர்களிடம் அவரை பாதுகாக்க போலீசார் பாதுகாப்பு தேவை.
ஆதவ் அர்ஜுனை
திருமாவளவன் சரியான கையாளவில்லை என தெரிகிறது. முலையிலேயே கிள்ளி இருக்க வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தலில் அனைத்து கட்சியும் சேர்ந்து முடிவு எடுப்போம். ஈரோடு தேர்தலை பொருத்தவரை பாஜக என்பது அனுபவஸ்தர் உள்ள கட்சி அவர்கள் யோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார்.
Comments are closed.