- Advertisement -

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, மாற்றம் அமைப்பின் சார்பில், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு!

- Advertisement -

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்திலும், விளம்பரம் செய்யும் நோக்கத்தில் வெறும் எண்ணிக்கைக்காக மட்டும் மரகன்றுகளை நடவு செய்து, அதை வளர்க்காமல் விட்டு விட கூடாது என்பதை கொள்கையாக வைத்து செயல்பட்டு வரும் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி பீமநகர், வயலூர் சாலை, அல்லித்துறை, போச்சம்பட்டி, சமயபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரும் தேசிய, மாநில விருதுகள் பெற்ற நடிகரும், இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ், மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆறுமுகம், மகளிர் பிரிவு இணைச் செயலாளர் அல்லிகொடி, வழக்கறிஞர் பூபாலன், அகிலாண்டேஸ்வரி, பிரபாவதி, சுகுணா, மோகணபிரியா ஆகியோர் கலந்து கொண்டு சீதா, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பல வகை மரக்கன்றுகளை வழங்கினர்.

Vagai

Bismi

மரக்கன்றுகளை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களது வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்