பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று தலைமை நிர்வாக குழு ஆணைக்கிணங்க,
நிறுவனர் தலைவர் வேல்முருகன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில், மாநில மகளிர் அணி தலைவி பொன்முடி பன்னீர்செல்வம் துணைத்தலைவி நந்தினி ஆகியோர்களை முன்னிலையில், திருச்சி மாவட்ட செயலாளர் ஐயப்பன், திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவி சுகந்தி, துணைத்தலைவி கலாவதி, மக்கள் தொடர்பாளர் மயில்வாகனம், மகளிர் அணி அமைப்பு செயலாளர் மார்கரேட் சகாயம் மேரி அவர்களின் ஏற்பாட்டில் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் மகளிர் தின விழா ஓவிய போட்டி, பாட்டு போட்டி என இந்நிகழ்ச்சியில் அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் நிறுவனர் தலைவர் செந்தில்குமார் ஆதரவுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது,
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் ஆசிரியர் பாலகிருஷ்ணன், ராகேஷ் சுப்பிரமணியன் தமிழ்நாடு ஏரோஸ் கேட்டபால் சங்கம் நிறுவனர் தலைவர், பண்ணை எம்பி சிங்காரவேலன் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் ஐயோ இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர், மேலும் நிகழ்ச்சியில் ஜான் பிரிட்டோ ராஜேந்திரன் மற்றும் திருச்சி மாவட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மாலை மாதாந்திர கூட்டத்தில் மகளிர் அணிகள் பங்கேற்று கேக் வெட்டி, ஆடல் பாடலுடன் கொண்டாடினர்.
மேலும் மாதாந்திர கூட்டத்தில் மே மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நாடகம், நடனம், கவிதை வாசிப்பது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.