அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது!

0

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த டாக்டர் அப்துல்கலாமின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள MTC முத்து டியூஷன் சென்டர் மற்றும் மாற்றம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், மரக்கன்று கல்வி உதவித்தொகை வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அரசு வழக்கறிஞர் R.பாஸ்கரன்‌ மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக லட்சுமி ஜுவல்லர்ஸ் OTS.N.பாலாஜி, Mister Interior மிதுன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், மரக்கன்றுகள், கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்பித்தனர். இந்த விழாவை MTC முத்து டியூஷன் சென்டர் இயக்குனர் கலாம் M.செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்தார்‌.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்