திருச்சியில் வரும் 17 ஆம் தேதி மீலாதுநபி பேரணி – தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நடைபெற உள்ளது!

நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மீலாதுநபி விழாவை முன்னிட்டு தமிழக தர்க்காக்கள் பேரவை சார்பில் மாபெரும் மீலாடி விழா பேரணி திருச்சி நத்தர்ஷா தர்காவில் வரும் 17 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

தமிழக தர்க்காக்கள் பேரவை நிறுவனரும், மாநில தலைவருமான ஜனாப்.AR. அல்தாப் உசேன் சாஹிப் தலைமையில் நடைபெற உள்ள இப்பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் சாஹிப் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பேரணியை துவக்கி வைக்க உள்ளார்.

- Advertisement -

தமிழக தர்க்காக்கள் பேரவை மாநில பொதுச்செயலாளர் AR. லியாகத் அலி வரவேற்புரை வழங்க உள்ளார். மேலும் நத்தர்ஷா தர்கா நிர்வாக தலைமை அறங்காவலரும், தமிழக தர்க்காக்கள் பேரவை மாநில பொருளாளருமான அல்லாபக்ஷ் சாஹிப் கலந்து கொண்டு துவக்க உரை வழங்க உள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் முன்னிலை வகிக்கின்றனர். பேரணிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்