ஐசிஎப் பேராயம் சார்பில் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-முனைவர் பா. ஜான் ராஜ்குமார்

ஐசிஎப் பேராயம் சார்பில் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-முனைவர் பா. ஜான் ராஜ்குமார்

Bismi

அன்பான தேவ ஜனங்களே எனக்கு பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு சிறப்பு செய்தி உங்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறேன். ஆண்டவரும் ரட்சகரும் மீட்பவருமான இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2026 இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று நிறைய பேர் கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கலாம். காரணம் 2025 ஆம் ஆண்டில் நிறைய இழப்புகள், விபத்துகள், மழை வெள்ளங்கள் மிகவும் சந்தித்து இருக்கிறோம். மிகவும் இக்கட்டான நாட்களாக தான் கடந்து போய் இருக்கிறது 2025. ஆனால் வரக்கூடிய 2026 புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் உண்டாக்கும் என நாம் நம்புவோம். காரணம் ஏசாயா தீர்க்கதரிசி புத்தகத்தில் 60 ஆம் அதிகாரம் 20 ஆம் வசனத்தில் வாசிக்கும் போது கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போகும். இந்த வார்த்தையை ஆண்டவர் இந்த 2026 ஆம் ஆண்டிலேயே நமக்கு கொடுத்திருக்கிறார். அவரே நமக்கு வெளிச்சமாய் இருப்பார். எனவே நம்முடைய துக்க நாட்கள் முடிந்து போகும். அப்படி என்றால் உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று நாம் விசுவாசிப்போம். 2026 இல் உங்கள் குடும்பத்திலும், தொழிலிலும், வியாபாரத்திலும், பிள்ளைகள் படிப்பிலும், நல்ல ஞானத்தையும் அறிவையும் ஆண்டவர் உங்களுக்கு தருவாராக. தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் வருவாய் ஏற்படுத்தி தருவார். குடும்பங்களில் சமாதானத்தை உண்டு பண்ணுவார். காரணம் இந்த ஆண்டு ஆண்டவர் உங்களுக்கு சொல்லுகிற காரியம் உன் துக்க நாட்கள் முடிந்து போகும். எனவே இனிவரும் நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சி நாட்களாக நிம்மதியை நாட்களாக சமாதானத்து நாட்களாக உங்களுக்கு அமையப் போகிறது. எனவே ஐசிஎப் பேராயம் சார்பில் தமிழகத்தில் 35 மாவட்டத்தில் இருக்கக்கூடிய போதகர்கள் ரெவரண்டுகள் மேலும் உயர்மட்ட குழு நிர்வாகிகள், அதேபோல ஆந்திரா, கர்நாடகா, கேரளா புதுச்செரி மற்றும் டெல்லி, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேஷ், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய போதகர்களுக்கு ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த ஆண்டு உங்களுக்கு மிகப்பெரிய காரியங்களை ஆண்டவர் செய்வார். உங்கள் திருச்சபைகளில் மிகப்பெரிய அற்புதங்களை அடையாளங்களை செய்து தேவனுடைய நாமத்தை மகீமையப்படுத்துவீர்கள். அனைவருக்கும் நீங்கள் வெளிச்சமாக இருப்பீர்கள். அனைவருடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றிவிடுங்கள். எனவே இந்த ஆண்டு உங்களுடைய குடும்பங்களில் மிகப்பெரிய நன்மை உண்டாகும். நாம் வாசித்தபடி கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போகும் என்ற வார்த்தை படி வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு வாக்குத்தத்தம் கர்த்தர் நிறைவேற்றி தருவாராக. இந்த வசனங்கள் மூலமாய் உங்களை இந்த நாளிலே நான் ஆசீர்வதித்து ஜெபிக்கிறேன். ஆண்டவர் உங்களோடு கூட இருப்பாராக ஆமென். பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் ஐ.சி.எப் பேராயம் திருச்சி.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்