திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரை முருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
சென்னை, நெல்லை, மதுரை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட எல்டிடி அமைப்பினரோடு தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திருச்சி, கோவையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.