நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்
சுற்றுலாவாசிகள் குவியும் நாகூர் கடற்கரையில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்
உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம் நாகூர் தர்காவிற்கு வருகைதரும் ஏராளமான சுற்றுலா வாசிகள் நாகூர் சில்லடி கடற்கரையில் குளிப்பது வழக்கம். ஆனால் கடல் அலையின் சீற்றத்தால் கடலில் குளிக்கும் சுற்றுலா வாசிகள் அலையில் சிக்கி உயிரிழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகை இன்று நிறுவப்பட்டது. எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ்,. நகர மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். உயிர் இழப்பை தடுக்கும் வகையில் கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகை பொருத்தப்பட்டு இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், புறநகர் காவல் நிலையம் அமைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.