தர்மபுரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு வழங்கிய பன்முகக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர்!
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பன்முகக் கலைஞர்கள் நலசங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நலச்சங்கதின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், பொருளாளர் பகுருதீன் அலி அகமது ஆகியோரின் அனுமதி உடன், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் விஜய் பிரேமா ஏற்பாட்டில், தர்மபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருண்குமார் (பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் தன்னார்வலர்), செயற்குழு உறுப்பினர் நாகார்ஜுன், அறக்கட்டளையின் தன்னார்வலர் சேக் தாவூத், சேலம் மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினர் கோகுல்ராஜ், மணிகண்டன், ஜெயசூர்யா மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் என அனைவரும் ஒன்றிணைந்து அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவுகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு துணை நின்று பல உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்த செயலை பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
Comments are closed.