- Advertisement -

காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 வது ஆண்டு விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

0

- Advertisement -

காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 16 வயது உடையோருக்கான 60 மீட்டர், 80மீட்டர், 100 மீட்டர், 300 மீட்டர், 400மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர் பிரிவுகளில் ஒட்டபந்தயம், நீளம் தாண்டுதல், தொடர் ஒட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Vagai

இப்போட்டியில் மாணவர்களுக்கான சீனியர் பிரிவில் என்.வி அகடாமியை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் முதல் இடத்தையும், மாணவிகளுக்கான பிரிவில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடாமியை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகள் முதல் இடத்தையும் பிடித்தனர். அதே போல ஜூனியர் பிரிவில் மாணவர்களுக்கான பிரிவில் ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் தடகள விளையாட்டு வீரர்கள் முதல் இடத்தையும், மாணவிகள் பிரிவில் செயிண்ட் ஜேம்ஸ் பள்ளியை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகள் முதல் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

Bismi

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தொழிலதிபர் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ஆ.சுப்ரமணி, சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் தேசிய பயிற்ச்சியாளருமான நல்லுசாமி அண்ணாவி, தேசிய போல் வால்ட் விளையாட்டு வீரரும் கல்லுக்குழி ரயில்வே மைதான கண்கானிப்பாளருமான தமிழரசன், கால்பந்து விளையாட்டு வீரர் சிவக்குமார், தேசிய தடகள விளையாட்டு வீரரும் ரயில்வே ஊழியருமான கமால் மற்றும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியூமான ஆர்.ஏ.தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கவோரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிர்வாகியும் தடகள பயிற்ச்சியாளரும் அஞ்சல் துறை ஊழியருமான முனியாண்டி, உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் பாபு மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்