நவம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123% அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 2 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123% அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இயல்பை விட அதிக மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேபோல் இன்று இரவு 7 மணி வரை சென்னை உட்பட 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்