திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஆய்வு!

0

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சி வந்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் இன்று அந்தநல்லூர் அருகே உள்ள அல்லூர் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான பாரதி துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து அவர் பள்ளி ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது அருகே அமர்ந்திருந்த மாணவிகளிடம் காலை உணவு குறித்தும், அவர்களின் கல்வி குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்