தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி திமுக இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் திமுக கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர் மருந்து கடை மோகன், நகர துணை அமைப்பாளர் தீபக், வட்ட செயலாளர்கள் ராஜாசிவா, சங்கர், உதயா, ரபீக் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் அணியை சேர்ந்த மாரிக்கண்ணன், மயில் குணா ராஜபாண்டி, மாதவன், பிரபு, அருண், தியாகு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.