- Advertisement -

திருச்சியில் ஊர் கேப்ஸ் மின் ஆட்டோ சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்!

0

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்கேப்ஸ் என்ற வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும் வகையில் ஆட்டோ சேவையை துவங்கி செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஊர்கேப்ஸ் நிறுவனம் தனது சேவையை துவங்கி உள்ளது. இதன் அறிமுக விழா திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கொடியசைத்து சேவையை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஊர் கேப்ஸ் நிறுவனர் மரிய அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vagai

இது குறித்து மரிய அந்தோணி செய்தியாளர்களிடம் பேசுகையில்….

Bismi

ஊர்கேப்ஸ் மின் ஆட்டோ சேவையை வாட்ஸ் அப் எண் 8098480980 மூலமாக நாம் எளிதில் பயன்படுத்தலாம். கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தினாலும் திருச்சியில் அந்நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் சொந்த வாகனத்தை இயக்கும் வகையில் செயல்பட உள்ளது.

இந்த நிறுவனத்தில் பகுதி நேரம் மற்றும் முழு நேரமாக ஆட்டோ ஓட்டுநர்களை பயன்படுத்தி வருகின்றனர். பகுதி நேரமாக பணியில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநருக்கு அவர்கள் பெரும் வாடகை பணத்திலிருந்து 45 சதவீதம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் முழு நேரமாக பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் அதிகப்படியாக இயக்கும் பொழுது அதற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் ஆகியவற்றில் இயக்கப்படும் வாகனங்கள் வாங்கும் கட்டணத்தை விட மின்ஆட்டோவின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது.

2 கிலோமீட்டர் வரை ரூபாய் 49-ம் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூபாய்15 ம் வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. தற்போது இந்த நிறுவனம் திருச்சியில் 30 வாகனத்துடன் தொடங்கியிருந்தாலும், திருச்சி முழுவதும் 400 மின் ஆட்டோ வாகனங்கள் இயக்கும் வகையில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்நிறுவத்துடன் இணைந்து செயல்பட 8428284289, 8428384288 ஆகிய எண்களை ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்