திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும் கருவியினையும், பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணிக்கும் வகையில் ரூ.36 இலட்சத்தில் புனரமைக்கப்பட்ட மின்தூக்கி சேவையையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் உள்நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் உணவு வழங்கும் தட்டுகளையும், முகம் மற்றும் வாய் பகுதி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பற்பசை மற்றும் பல்துலக்கி ஆகியவற்றை வழங்கி, ரூ.110 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வுகளில் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் குமரவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் உதயா அருணா, உதவி கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.








Comments are closed.