கலாம்ஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

- Advertisement -

திருச்சி தில்லை நகர் பகுதியில் YAHWEH ACADEMY மான்டசரி டீச்சர் ட்ரைனிங் சார்பில் கலாம்ஸ் உலக சாதனை நிகழ்வு நேற்று துவங்கியது. இந்த உலக சாதனையானது நேற்று மாலை 5 மணிக்கு துவங்கி இன்று காலை 9 மணி வரை தொடர்ந்து வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதில் 24 மணி நேரமும் தொடர் வகுப்பில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

- Advertisement -

அவ்வாறு உலக சாதனை நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, உலக சாதனை நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு “கலாம் உலக சாதனை விருதினை” வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் அகாடமியின் நிர்வாக இயக்குனர் ஜூலி ஷெரான் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்