திருச்சியில் 100 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராவணன் சிலம்பம் அகடாமி சார்பில் சிலம்ப வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்ட உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பொன்னையா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் தொடர்ந்து 100 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்க உள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் திமுக மாநகர செயலாளரும், மண்டல குழுத் தலைவருமான மதிவாணன், பாலக்கரை பகுதி செயலாளர் ராஜ் முகம்மது உள்பட திமுக நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இராவணன் சிலம்பம் அகாடமி வாத்தியார் இலக்கிய தாசன் செய்திருந்தார்.