தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார்
திருச்சி மாநகராட்சி 36 வது வார்டுக்கு உட்பட்ட அம்பிகாபுரம் ரயில்நகர் காலனியில் உள்ள நியாயவிலை கடையில் ரூபாய் ஆயிரத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை அப்பகுதியில் உள்ள 1365 குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார். தொடர்ந்து 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொது மக்களுக்கு பொங்கல் வழங்கியதுடன், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அப்பகுதியில் உள்ள ஐங்கரன் கலைக்கூடத்தை சேர்ந்த சிலம்ப மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயராமன் திருச்சி கிழக்கு தாசில்தார் குணசேகரன், கூட்டுறவு சார்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் சகிபுல்லா, அமராவதி மேலாளர் கபிலன் மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.