எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் – அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை!
மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது திருஉருவ சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், முத்து கருப்பன், கோப்பு நடராஜ், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் பகுதி கழக செயலாளர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.