திருச்சியில் ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி – 37 அணிகள் பங்கேற்பு!
ஆர்.ஜெ.ஜெ.எஸ் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்களுக்கான ஐந்தாம் ஆண்டு பூப்பந்தாட்ட போட்டி திருச்சி கல்லுக்குழி மைதானத்தில் இன்று துவங்கியது. மாநில துணைத் தலைவர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்னக இரயில்வே உள் விளையாட்டுத் துறை செயலர் ஹரிகுமார் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 45 வயதுக்கு மேல் உள்ள ஆடவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் சென்னை, அம்பத்தூர், தாம்பரம், அசோக் நகர், பொன்னேரி, மதுரை, நெல்லை, கோவை, தருமபுரி, சேலம், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஓசூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிதம்பரம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து 37 அணிகள் கலந்து கொண்டுள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெற உள்ளது. முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் உள்பட மொத்தம் 9 பரிசுகள் வழங்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற போட்டி துவக்க விழாவில் தேசிய வீரரும் ரயில்வே சேம்பியனுமான பிச்சை (எ) நித்தியானந்தம், திருச்சி மாவட்ட தலைவர் தகுணா, செயலாளர் சண்முக சுந்தரம், பொருளாளர் வேல்முருகன், துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் சிவானந்தம், நடராஜன், சிவராஜ், திருச்சி ரயில்வே மைதான பொறுப்பாளர் மற்றும் போல்ட் வால்ட் சாம்பியன் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆர்.ஜெ.ஜெ.எஸ் அணியின் தலைவர் இலங்கேஷ்வரன், செயலர் மணிமாறன், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர்கள் அங்கையர், பழனியப்பன், கேசவன், பாஸ்கர் மற்றும் இணை செயலாளர்கள் பிரசன்னா, வைரமுத்து, பாலமுருகன், பிரகாஷ் மற்றும் உறுப்பினர்கள் நாச்சியப்பன், சேகர் பாலகிருஷ்ணன், கல்யாண சுந்தரம், ராமன், போத்திராஜ், கார்த்திக், ராஜசேகரன், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.