திருச்சியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் – அமைப்பு செயலாளர் மனோகரன் பங்கேற்பு!

திருச்சி ஜங்ஷன் பகுதி அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் கொறடா, அமைப்பு செயலாளர் மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசுகையில்,…

- Advertisement -

திமுக அரசு குடும்ப ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் அதிமுக ஏழை மக்களுக்கான ஆட்சியை நடத்தி வந்தது. இன்றைக்கு திமுக ஆட்சியால் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களுக்கு வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள். மேற்கு தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்று உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு தொகுதியில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அடுத்து அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையில் அமைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

மேலும் இக்கூட்டத்தில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், நிர்வாகிகள் கே சி பரமசிவம், ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாபன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், வெங்கட்பிரபு, பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, ரோஜர், ராஜேந்திரன், கலைவாணன், எம்ஆர்ஆர் முஸ்தபா, வர்த்தக அணி துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் , அப்பாஸ், இலியாஸ், பாலாஜி, முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகர், வக்கீல் முத்துமாரி, நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்திரன், பெருமாள், வட்ட செயலாளர்கள் ஒத்தக்கடை மகேந்திரன், K.முத்துக்குமார், கணேஷ், கதிர்வேல், காமராஜ், ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி செய்திருந்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்